மக்கு சுப்பிரமணி டூ புருடா மன்னன் உதயநிதி.!! திமுகவை வெளுத்து வாங்கிய ஜெயக்குமார்.!! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு என்ற தலைப்பில் அதிமுக மாநில மாநாடு நடைபெற்றது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் திமுக தரப்பிலிருந்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிமுக மாநாட்டை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் "விடியா திமுக ஆட்சியில் தமிழக சுகாதாரத் துறையை சீரழிப்பதற்கென்று அவதாரம் எடுத்தது போல் செயல்பட்டு வரும் மந்திரி மா.சுப்பிரமணியன் என்ற மக்கு சுப்பிரமணி, அதிமுக வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாட்டில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது பற்றி கேள்விப்பட்டது முதல் பித்தம் தலைக்கேறி உளற தொடங்கியுள்ளார்.

சென்னையில் பரம்பரை வாரிசு உதயநிதி நடத்திய உண்ணாவிரதம் பிசு பிசுத்ததை மறைக்க, மாநாட்டு வெற்றி நாயகர் புரட்சித் தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் மீது புழுதியையும், சேற்றையும் வாரி இறைக்கும் வேலையில் இறங்கி இருக்கிறார். 

நீட் தேர்வு விவகாரத்தால் உயிர் துறந்த 21 பேர் மரணத்திற்கு எங்கள் கழக பொதுச்செயலாளர் அண்ணன் திரு.எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தான் காரணம் என்று தன் நாவை திறந்து நெருப்பைக் கக்கி இருக்கிறார் இந்த மந்திரி சுப்பிரமணியன். நீட்டை ஒழிப்பதற்கு இதய சுத்தியோடு பாடுபட்டவர் மக்கள் முதல்வர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்கள்.

ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழித்து விடுவோம் என்று விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலினும், அவரது வாரிசு உதயநிதியும் வாய் பந்தல் போட்டு ஏமாற்றியதன் விளைவு தான் இத்தனை அகால மரணங்கள். மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்ட திமுகவினர் தங்கள் தவறுகளை மறைப்பதற்கு அடுத்தவர்கள் மீது பழி போடுவது குறித்து மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

நவபாஷாணத்தில் புழுத்த புழுவாக நெளிந்து பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் மந்திரி சுப்பிரமணியம் தான் அரசு மருத்துவமனைகளில் நிகழும் மரணங்களுக்கு காரணம் என்றால் ஏற்பாரா? காவல் நிலைய மரணங்களுக்கு என்கவுண்டர்களுக்கும் அந்தத் துறையை கையில் வைத்திருக்கும் நிர்வாகத் திறமையற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தான் காரணம் என்றால் ஏற்பார்களா? 

தேர்தல் பரப்புரையின் போது வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் புருடா மன்னன் உதயநிதி அவிழ்த்து விட்ட நிறைவேற்ற முடியாத நீட் ரத்து வாக்குறுதி தான் இத்தனை மரணங்களுக்கு காரணம் என்று நான் குற்றம் சாட்டுகிறேன். விளையாட்டு மந்திரியின் வினையான பேச்சுக்கள் தான், நம்பிய மக்களை காவு வாங்கி இருக்கிறது.

"எங்களால் நீட் தேர்வை ஒழிக்க முடியவில்லை" என்று தமிழக மக்களிடம் பகிரங்கமாக கூறி ஸ்டாலினும் உதயநிதியும் மக்கு சுப்பிரமணியமும் மன்னிப்பு கேட்க வேண்டும். வீணாக வாய் நீளம் காட்டினால் "குட்டி குறைத்து, தாய் தலையில் விடிந்த கதையாகிவிடும்" என்னுடைய எச்சரிக்கிறேன்" என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK Jayakumar criticized DMK minister subramanian


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->