சென்னை FIITJEE பயிற்சி மையத்தில் மத்திய குற்றப்பிரிவு சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!
FIITJEE Coaching Centre Police raid
சென்னை கீழ்பாக்கத்தில் செயல்பட்டு வரும் FIITJEE பயிற்சி மையம், கல்வி தொடர்பான மோசடியில் ஈடுபடுவதாக மாணவர்களின் பெற்றோரால் புகார் எழுப்பப்பட்டது. அதன் பின்னணியில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக சோதனைக்கு இறங்கினர்.
IIT மற்றும் JEE தேர்வுகளுக்கான முன்னோடியான பயிற்சிகளை வழங்கும் இந்த நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது, பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சுமார் ரூ.7.5 லட்சம் மதிப்புடைய 22 வங்கி காசோலைகள், அனுமதி இல்லா அடையாள அட்டைகள் மற்றும் ஏராளமான கல்வி தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மொத்தம் சோதனையில் 100-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சோதனையையடுத்து பல புதிய தகவல்களும் வெளியாக உள்ளன. மாணவர்கள் மற்றும் பெற்றோரின் நலனை பாதிக்கும் வகையில் நடைபெற்றிருக்கக்கூடிய செயல்பாடுகள் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
FIITJEE Coaching Centre Police raid