ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தல்.. 225 கிலோ குட்காயுடன் வாலிபர் கைது!  - Seithipunal
Seithipunal


தோஸ்த் வாகனத்தில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்திய ஓட்டுனரை போலீசார்  கைது செய்தனர்.மேலும் அவனிடமிருந்த  225 கிலோ குட்கா பறிமுதல்  செய்யப்பட்டது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ,கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஒசூர் உள் வட்ட சாலை வழியாக தோஸ்த் வாகனம் ஒன்று சென்றுள்ளது. இந்த வாகனத்தை தூத்துக்குடி கிழக்கு தெருவை சேர்ந்த சொர்ணலிங்கம் (30) என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது ஓசூர் அசோக் பில்லர் பகுதியில் ஓசூர் நகர காவல் ஆய்வாளர் நாகராஜ், தலைமையிலான காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த தோஸ்த் வாகனத்தை மடக்கி சோதனை செய்துள்ளனர். சோதனையில் வாகனத்தின் ஒரு பகுதியில் ரகசிய அறை இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த அறைக்குள் பதுக்கி, கடத்தி கொண்டு செல்லப்பட்ட 225 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வாகனத்தில் ரகசிய அறை அமைத்து குட்காவை கடத்தி சென்ற ஓட்டுநர் சொர்ணலிங்கத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சொர்ணலிங்கம் பெங்களூருக்கும் சென்னைக்கும் குருவியாக செயல்பட்டு ஏற்கனவே மூன்று முறை குட்கா பொருள்களை சென்னைக்கு கடத்தி சென்றதாக கூறியுள்ளார் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A secret room was set up for smuggling ganja A young man was arrested with 225 kilos of ganja


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->