உலக செவிலியர் தினம் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.!!
cm mk stalin wishes to world nurses day
ஒவ்வொரு ஆண்டு மே மாதம் 12-ந் தேதி சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன் படி இந்த ஆண்டுக்கான செவிலியர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், உலக செவிலியர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி-மதம்-நிறம் என எதைப் பற்றியும் சிந்திக்காமல் அனைவரையும் ஒன்றுபோலக் கருதி, அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களான செவிலியர்கள் அனைவருக்கும் #InternationalNursesDay வாழ்த்துகள்! என்றுத் தெரிவித்தார்.
English Summary
cm mk stalin wishes to world nurses day