பெருமை கொள்ளும் பிரகலாத் ராமராவ்...! உலக கவனத்தை ஈர்த்த இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை...! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் கடந்த 8 மற்றும் 9-ம் தேதிகளில், இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசிய போது, அவை அனைத்தையும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ''ஆகாஷ் ஏவுகணைகள்'' வானத்திலேயே தவிடு பொடியாக்கின.இந்த ஆகாஷ் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (டி.ஆர்.டி.ஒ.) விஞ்ஞானி டாக்டர் ''பிரகலாத் ராமாராவ்தான்'' உருவாக்கியுள்ளார்.

மேலும், இந்தியாவின் ஏவுகணை விஞ்ஞானி என்று புகழப்படும் டாக்டர் ''அப்துல் கலாம்'' அவர்கள்தான், ஆகாஷ் ஏவுகணை திட்டத்தின் இயக்குநராக டாக்டர் பிரகலாத் ராமாராவை தேர்ந்தெடுத்துள்ளார்.இதில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட ''ஆகாஷ்'' திட்டத்தில் மிக குறைந்த வயதுள்ள இயக்குநராக 'பிரகலாத்' பணியாற்றினார்.

இதுதொடர்பாக விஞ்ஞானி பிரகலாத் தெரிவிக்கையில்,"வான் வழியாக எதிரிகள் நடத்தும் தாக்குதலை எதிர்கொள்ள ஆகாஷ் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. அதை உருவாக்குவதில் நானும் உதவியிருக்கிறேன் என்பதை நினைக்கும்போது பெருமிதமாக உள்ளது.பாகிஸ்தான் டிரோன்கள், ஏவுகணைகளை ஆகாஷ் தாக்கி அழித்த அந்த நாள்தான் எனது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாள்.

ஆகாஷ் ஏவுகணை மிகவும் வேகமானது, ஆபத்தானது. பாகிஸ்தானுடனான மோதலின் போது நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் அற்புதமாக ஆகாஷ் ஏவுகணை செயலாற்றி உள்ளது" எனத் தெரிவித்தார். தாக்குதலின்போது மிக வேகமாக வரும் எதிரிகளின் டிரோன்கள், ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள், இன்னும் சொல்லப் போனால் 'எப்16 '' போன்ற போர் விமானங்களையும் கூட வானிலேயே இடைமறித்து தாக்கி அழிக்கும் வகையில் ''ஆகாஷ்'' உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆகாஷ் ஏவுகணைகளை 'டிஆர்டிஓ' மற்றும் பாரத் டைனமிக் லிமிடெட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன.இதுதான் தற்போது இந்தியாவின் வான் பாதுகாப்புக்கு மிக முக்கியமானதாக மாறி இருக்கிறது. மேலும், இந்த ஏவுகணையை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல முடியும். மிக வேகமானது, பயங்கரமானது. 80 கி.மீ தொலைவிலுள்ள இலக்கை இடைமறித்து தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது.

ஆகாஷ் ஏவுகணை இந்தியாவின் முப்படைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஏவுகணைகளை வாங்க அர்மீனியா ஆர்டர் வழங்கியுள்ளது. இதன் விலை மிகவும் குறைவு. பயன்படுத்துவது எளிமையானது, சிறந்த செயல்பாடு கொண்டது. இதனால் இந்த ஏவுகணைகளை வாங்க உலகளவில் பல நாடுகள் முயற்சித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prahlad RamaRao is proud Indias Akash missile has attracted world attention


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->