ஆந்திராவில் சோகம்.. சாலை விபத்தில் 3 சகோதரர்கள் பலி.!
three brothers died for accident in andira
ஆந்திர மாநிலத்தில் உள்ள அன்னமைய்யா மாவட்டம், மதனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் சலபதி, ஜெயச்சந்திரா, நாகேந்திரா. சகோதரர்களான இவர்களில் சலபதி, ஜெயச்சந்திரா ஆகியோர் துணை காவல் ஆய்வாளர்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். நாகேந்திரா கல்லூரி விரிவுரையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இந்த நிலையில், இவர்கள் மூன்று பேரும் அனந்தபூரில் உள்ள உறவினர் வீட்டு இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக நெல்லூரை சேர்ந்த வேணுகோபால் என்பவருடன் நேற்று முன்தினம் காரில் சென்றனர். அதன் படி மூன்று பேரும் இறுதி சடங்கை முடித்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு வளைவில் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென மினி லாரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் முழுவதும் நொறுங்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three brothers died for accident in andira