திடீர் ரத்து! அதிகாரபூர்வமாக அறிவித்த எடப்பாடி பழனிசாமி! காரணம் என்ன?!
AIADMK Head Announce 252023
தஞ்சையில் வரும் 4 ஆம் தேதி நடைபெற இருந்த முன்னாள் அமைச்சர் மறைந்த இரா. துரைக்கண்ணுவின் மார்பளவு வெண்கலச் சிலை திறப்பு விழா மற்றும் ஒரத்தநாட்டில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுகவின் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி K. பழனிசாமி ஒப்புதலோடு, அதிமுகவின் தலைமை கலக்கம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், 4.5.2023 அன்று தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கபிஸ்தலம் கிராமம், அம்மா அரங்கத்தில், தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த திரு. இரா. துரைக்கண்ணு அவர்களின் மார்பளவு வெண்கலச் சிலை திறப்பு விழாவிலும்; அதனைத் தொடர்ந்து ஒரத்தநாட்டில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதாக இருந்தது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்துவரும் நிலையில், மேற்கண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு, 15.5.2023 சனிக் கிழமை அன்று நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
AIADMK Head Announce 252023