ஆப்ரேசன் சிந்தூர் செயல்பாடுகள் இன்னும் தொடர்கிறது...! - இந்திய விமானப்படை
Operation Sindhoor operations are still ongoing Indian Air Force
காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அறவே அழித்தது. இதற்கு இந்திய ராணுவம், ''ஆப்ரேசன் சிந்தூர'' எனப் பெயரிட்டது.இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலையீட்டால், இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. இது குறித்து நாளை, இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.இந்த நிலையில், ''ஆப்ரேசன் சிந்தூர்'' தொடர்கிறது என்று இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளது.
விமானப்படை:
அந்த பதிவில் விமானப்படை குறிப்பிட்டுள்ளதாவது, "இந்திய விமானப்படை ஆப்ரேசன் சிந்தூரில் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தொழில்முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. தேசிய நோக்கங்களுக்காக விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆப்ரேசன் சிந்தூர் செயல்பாடுகள் இன்னும் தொடர்கிறது. இது தொடர்பாக சரியான நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும். ஊகங்கள் அடிப்படையில் பரவும் தகவல்களை சரிபார்க்காமல் மற்றவர்களுக்கு பகிருவதை தவிருங்கள்.சரிபார்க்கப்படாத தகவல்களை நம்புவதையும் பரப்புவதையும் தவிர்க்குமாறு இந்திய விமானப்படை அனைவரையும் கேட்டுக்கொள்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
இது தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
English Summary
Operation Sindhoor operations are still ongoing Indian Air Force