ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவான திபெத் நிலநடுக்கம்...! சேதாரம் எவ்வளவு...?
Earthquake in Tibet magnitude 5point7 How much damage
இந்தியாவுக்கு அண்மையில் உள்ள திபெத் நாட்டில், இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கமானது, இன்று அதாவது திங்கள்கிழமை அதிகாலை 2:41 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

இதை தேசிய நில அதிர்வு மையம் (NCS), ரிக்டர் அளவுகோளில் 5.7 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது.மேலும் இந்த நில அதிர்வானது உணரப்பட்டது.இதனால் இதுவரை யாருக்கும் காயமோ அல்லது சேதமோ பதிவாகவில்லை.
இதற்கு முன்னதாக மே 8 ஆம் தேதி, இந்தப் பகுதியில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Earthquake in Tibet magnitude 5point7 How much damage