ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் முதல் படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு.!!
ravi mohan studios first movie promo vedio released
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் தொடக்க விழா நேற்று பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
இந்த விழாவிற்கு பல திரைப்பிரபலங்கள் தமிழ் மட்டுமல்லாது பிற மொழி நட்சத்திர நடிகர்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவின்போது, ரவிமோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் முதலில் தயாரிக்கப்போகும் இரண்டு படங்களின் பூஜையை நடத்தினர்.
அதில் ஒன்றான டிக்கிலோனா திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் "ப்ரோ கோட்" என்ற திரைப்படத்தை தயாரித்து நடிக்கிறார் ரவி மோகன். இந்தப் படத்தில் எஸ்.ஜே சூர்யா, ஷரத்தா ஸ்ரீனாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், ப்ரோ கோட் படத்தின் ப்ரோமோ வீடியோவை ரவி மோகன் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது.
English Summary
ravi mohan studios first movie promo vedio released