ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ டீசர் இன்று வெளியீடு; போற போக்கை பார்த்தால் பொங்கலுக்கு விஜய் மகன் படம் வந்துடும் போல.. ‘சிக்மா’ டீசர் ரிலீஸ் அப்டேட்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. இந்த படத்தின் அட்டகாசமான டீசர் இன்று  மாலை 5 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான போஸ்டரும் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படத்தின் டீசரே இன்னும் வெளியாகாத நிலையில், ஜேசன் சஞ்சயின் முதல் படமான ‘சிக்மா’ டீசர் அப்டேட் வந்துள்ளதை பார்த்த ரசிகர்கள், “இந்த வேகத்தில் படம் பொங்கலுக்கே வந்துவிடும் போல” என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

‘சிக்மா’ படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவர் கையில் துப்பாக்கியுடன் வெறிகொண்டு சுடும் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. ஜேசன் சஞ்சய், ‘வேட்டைக்காரன்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து “நான் அடிச்சா தாங்கமாட்ட” பாடலில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அப்போது அவரும் ஹீரோவாக மாறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகர் போல இயக்குநராகும் பாதையை அவர் தேர்வு செய்துள்ளார்.

பிரேமம் பட இயக்குநர் உள்ளிட்ட பலர் ஜேசன் சஞ்சயை வைத்து படம் எடுக்க விஜய்யிடம் பேசியதாக முன்பே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது லைகா தயாரிப்பில் சந்தீப் கிஷனை வைத்து ‘சிக்மா’ படத்தை இயக்கி, அதன் படப்பிடிப்பையும் அவர் நிறைவு செய்துள்ளார்.

ஏற்கனவே ‘ஜன நாயகன்’ படத்துக்கு போட்டியாக பிரபாஸின் ‘தி ராஜா சாப்’, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ போன்ற படங்கள் களமிறங்க உள்ள நிலையில், ஜேசன் சஞ்சயின் முதல் படமான ‘சிக்மா’வும் பொங்கல் ரிலீஸ் என்ற அறிவிப்புடன் டீசர் வெளியானால் அது ரசிகர்களிடையே கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

‘சிக்மா’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பும் டீசருடன் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ஜேசன் சஞ்சயின் இயக்கத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jason Sanjay Sigma teaser released today If things go according to plan Vijay son film will be released for Pongal Sigma teaser release update


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->