கருந்துயரம்! பண்டிகை மகிழ்ச்சி சோகமானது...நெதர்லாந்தில் கிறிஸ்துமஸ் பேரணியில் விபத்து...! நடந்தது என்ன...? - Seithipunal
Seithipunal


கிறிஸ்தவ மக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் நாளை மறுதினம் உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, பல்வேறு நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஏற்கனவே களைகட்டத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக மேற்கத்திய நாடுகளில், அலங்காரங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் அணிவகுப்புகள் மூலம் பண்டிகை மகிழ்ச்சி உச்சத்தை எட்டியுள்ளது.இந்த நிலையில், நெதர்லாந்து நாட்டின் ஹெல்டர்லாந்து மாகாணத்தில் உள்ள நன்ஸ்பெட் நகரில், நேற்று இரவு கிறிஸ்துமஸை முன்னிட்டு சிறப்பு அணிவகுப்பு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த விழாவைக் காண சாலையோரம் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.அப்போது, எதிர்பாராத விதமாக அதிவேகமாக வந்த ஒரு கார், அங்கு கூடியிருந்த மக்களிடையே பாய்ந்து மோதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த திடீர் சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர்.

இந்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே, காரை ஓட்டியதாகக் கூறப்படும் நன்ஸ்பெட் பகுதியைச் சேர்ந்த 56 வயதான பெண் ஒருவரை போலீசார் காவலில் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தற்செயலான விபத்தா? அல்லது திட்டமிட்ட தாக்குதலா? என்பது குறித்து போலீசார் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

terrible tragedy Festive joy turned into sorrow accident Christmas parade Netherlands What happened


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->