ஆய்வாளர் வீட்டில் நம்பிக்கை துரோகம்...! இளம்பெண்ணை வீடியோ எடுத்த டிரைவர் அதிரடியாக கைது...!
Betrayal trust investigators house driver who filmed young woman arrested swift operation
கோவை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டரின் டிரைவராக பணியாற்றி வந்தவர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாதவகண்ணன் (27). இன்ஸ்பெக்டரிடம் குடும்ப உறுப்பினரைப் போல நெருக்கமாக பழகி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்ஸ்பெக்டர் தனது மகள்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பில், உறவினரான ஒரு இளம்பெண்ணை தனது மதுக்கரை பகுதியில் உள்ள வீட்டில் தங்க வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
இதில் கடந்த இரண்டு நாட்களாக பணிச்சுமை காரணமாக இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், பாதுகாப்பு கருதி தனது டிரைவரான மாதவகண்ணனை வீட்டில் இருக்குமாறு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த அந்த இளம்பெண் குளித்துக் கொண்டிருந்த போது, மறைந்திருந்து மாதவகண்ணன் செல்போனில் வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை உணர்ந்த அந்த இளம்பெண் கடும் அதிர்ச்சியடைந்து, உடனடியாக செல்போன் மூலம் இன்ஸ்பெக்டரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துத் துயரத்துடன் அழுததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு, இளம்பெண் குளிக்கும் காட்சியை வீடியோ எடுத்ததாக தெரிவிக்கப்படும் மாதவகண்ணனை கைது செய்தனர்.இந்த சம்பவம் கோவை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Betrayal trust investigators house driver who filmed young woman arrested swift operation