பழனி முருகன் கோவிலில் ரோப் கார் திடீர் பழுது...! மணிக்கணக்கில் காத்த பக்தர்கள் படிப்பாதை ஏறிய அவதி...!
Ropeway Palani Murugan Temple suddenly breaks down Devotees who waited hours climb steps
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றப்படும் பழனி மலைமுருகன் திருக்கோவிலில், பக்தர்கள் எளிதாக மலைச்சிகரத்தை அடைய ரோப் கார் சேவையும் மின் இழுவை ரெயில் வசதியும் நீண்ட காலமாக செயல்பட்டு வருகின்றன. அதிலும், வேகமாகவும், இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியும் செல்ல முடிவதால் பெரும்பாலானோர் ரோப் கார் பயணத்தையே தேர்வு செய்கின்றனர்.

மேலும், ரோப் கார் சேவைக்கு வழக்கமாக தினமும் ஒரு மணி நேரம், மாதத்திற்கு ஒரு நாள் மற்றும் ஆண்டுக்கு ஒரு மாதம் பராமரிப்பு பணிக்காக இடைநிறுத்தம் வழங்கப்படும் நடைமுறை உள்ளது.
அந்த வகையில் இன்று காலை சேவை வழக்கம்போல் இயங்கும் என நம்பி, அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின்னணு கோளாறு காரணமாக ரோப் கார் திடீரென செயலிழந்தது.
இதையடுத்து ஊழியர்கள் அவசர பராமரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டாலும், சேவையை உடனடியாக மீண்டும் இயக்க முடியவில்லை.
நீண்ட நேரம் காத்திருந்தும் பயணம் மேற்கொள்ள முடியாததால், பக்தர்கள் படிப்பாதை வழியாகவும், மின் இழுவை ரெயில் மூலமாகவும் மலைக்கோவிலுக்குச் செல்லுமாறு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியது. எந்த முன் அறிவிப்பும் இன்றி சேவை நிறுத்தப்பட்டதால், பலர் சிரமத்திலும் ஏமாற்றத்திலும் ஆழ்ந்தனர்.
English Summary
Ropeway Palani Murugan Temple suddenly breaks down Devotees who waited hours climb steps