காதலர் தினப் பயணம் கொடூரமாக முடிந்தது...! - வழிப்பறி நாடகம் நடித்து கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன் கைது...!
Valentine Day trip ends tragedy Husband arrested killing pregnant wife while acting robbery drama
குருகிராம் நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வந்த 27 வயதான மஹக், தனது கணவர் அன்ஷுல் தவானுடன் அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தார். சார்ட்டர்ட் அக்கவுண்டராக பணியாற்றும் அன்ஷுலுடன் கடந்த 2025 செப்டம்பர் 25ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
அந்த திருமணத்திற்குப் பிறகு கர்ப்பமாக இருந்த மஹக், குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு, தம்பதியினர் குருகிராமிலிருந்து அன்ஷுலின் சொந்த ஊரான ஹிசார் நகரத்துக்கு சென்றனர்.

அங்கு தினத்தை கொண்டாடிய அவர்கள், மறுநாள் ஹன்சியில் உள்ள மஹக்கின் பெற்றோர் வீட்டிற்குச் சென்று நேரம் கழித்தனர்.மாலை சுமார் 7 மணியளவில் இருவரும் மீண்டும் குருகிராமை நோக்கி காரில் புறப்பட்டனர்.
ஆனால் அந்தப் பயணம் எதிர்பாராத திருப்பத்தை எடுத்தது.ஜஜ்ஜார் அருகே உள்ள பசோளர் கிராமத்தின் ஒதுக்குப்புறச் சாலையில் வழிப்பறிக் கும்பல் தாக்கி தனது மனைவியை கொன்றுவிட்டதாக அன்ஷுல் காவல் நிலையத்துக்கு தகவலளித்தார். ஆனால் அவரது விளக்கங்களில் முரண்பாடுகள் இருப்பதை கவனித்த காவல்துறையினர் சந்தேகமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து தீவிர விசாரணையில் உண்மை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழிப்பறி கதை முழுவதும் பொய்யாக இருப்பதும், அன்ஷுல் தானே மனைவியை கொலை செய்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.
மேலும், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், அந்த நாள் காரிலேயே ஏற்பட்ட வாக்குவாதம் கொடூர முடிவுக்கு தள்ளியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
முதலில் கழுத்தை நெரித்தும், பின்னர் கத்தரிக்கோலால் அறுத்தும் கொலை செய்ததாகவும், தடயங்கள் எதுவும் எஞ்சாதிருக்க கையுறைகள் அணிந்து திட்டமிட்டு செயலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து காவல்துறையினர் அன்ஷுலை கைது செய்து மேலான விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Valentine Day trip ends tragedy Husband arrested killing pregnant wife while acting robbery drama