பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் படத்திலிருந்து திடீரென விலகிய ராஷ்மிகா...! இதுதான் காரணமா....? - Seithipunal
Seithipunal


திரையுலகில் அதிகம் பேசப்படும் நட்சத்திர ஜோடிகளில் ஒருவரான விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் வருகிற 26-ஆம் தேதி உதய்பூர் நகரில் உள்ள பிரமாண்ட அரண்மனை வளாகத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனைத் தொடர்ந்து, மார்ச் 4-ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதுகுறித்த அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வெளியாகி, ரசிகர்களிடையே வேகமாக வைரலாகி வருகிறது.

திருமணத் தயாரிப்புகள் தீவிரமாக நடைபெறும் நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.இந்தியில் முன்னணி நடிகரான ஷாகித் கபூர் நடிக்கும் படத்தில், இயக்குனர் அமிஷ் ஷர்மா இயக்கத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் திடீரென அந்தப் படத்திலிருந்து ராஷ்மிகா விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும், திருமணத்தை முன்னிட்டு தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த திடீர் மாற்றம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rashmika Mandanna suddenly quits Bollywood actor Shahid Kapoor film this reason


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->