ஆந்திராவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்! விளையாட சென்ற 7 வயது சிறுமி…டிரம்முக்குள் சடலம்...!
Shocking incident that shook Andhra Pradesh 7year old girl who went play found dead inside drum
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம், மதனப்பள்ளி அருகே உள்ள நீருகட்டு வாரி பகுதியை சேர்ந்த கோபிநாத் நெசவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அவரது 7 வயது மகள் ரிஷிகா பிரியா, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தாள்.
குடும்பத்தை நடத்த கணவன்–மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால், குழந்தைகள் பெரும்பாலும் தாத்தா–பாட்டியுடன் வீட்டில் இருந்தனர்.

நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை என்பதால், ரிஷிகா பிரியா வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள்.
அதே நேரத்தில், எதிர் வீட்டை சேர்ந்த 30 வயதான குல்வர்தன், மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர், சிறுமியிடம் இனிமையாக பேசி தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்றதாக அங்கு அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, பின்னர் கொடூரமாக கொலை செய்ததாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
குற்றத்தை மறைக்க, வீட்டில் இருந்த பிளாஸ்டிக் டிரம்மில் உடலை மறைத்து வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மேலும், சிறுமி காணாமல் போனதை அறிந்த பெற்றோர் பதற்றமடைந்து அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் மதனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இந்த விசாரணைக்காக வந்த காவலர்கள், சந்தேகத்தின் பேரில் குல்வர்தன் வீட்டைச் சோதனை செய்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளில், அவர் சிறுமியை அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே நுழைந்த காவலர்கள் , பிளாஸ்டிக் டிரம்மில் சிறுமியின் உடலை கண்டெடுத்தனர். ஆனால் அந்த நேரத்தில் குல்வர்தன் காவலர்களை தள்ளிவிட்டு தப்பி ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, பெற்றோரும் பொதுமக்களும் கடும் கோபத்தில் மும்பை–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கலைந்தது.இந்த கொடூர சம்பவம் ஆந்திர மாநிலம் முழுவதும் அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Shocking incident that shook Andhra Pradesh 7year old girl who went play found dead inside drum