உதவித்தொகை போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கைது...! - அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலை குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில்,"உதவித்தொகை உயர்வை கோரி மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து அமைதியான முறையில் போராடி வரும் நிலையில், நள்ளிரவு நேரத்தில் ‘கைது நடவடிக்கை’ என்ற பெயரில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் அரசின் காவல்துறை, அவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்பதையும் பொருட்படுத்தாமல் சென்னை முழுவதும் துரத்திச் சென்று வன்முறையாக தாக்கி கைது செய்ததாக வரும் தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காவல்துறையின் இரக்கமற்ற நடவடிக்கையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மூத்த தலைவர் கே. பாலகிருஷ்ணனின் மனைவி பா. ஜான்சிராணி கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டணி கட்சித் தலைவரின் குடும்பத்தினரே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உருவாகியுள்ளது என்றால், அரசு அனைத்து கோரிக்கைக் குரல்களையும் ஒடுக்க முயற்சிப்பதற்கான சான்று இதுவே எனவும், இது ஜனநாயக விரோதமும் பாசிச மனப்பான்மையும் கொண்ட ஆட்சி முறையை வெளிப்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் மீது கருணையற்ற முறையில் நள்ளிரவு முழுவதும் அலைக்கழித்து, அவர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட மறுத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Disabled people arrested during scholarship protest Edappadi Palaniswami strongly condemns government


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->