சேட்டனின் ஆட்டம் வெறித்தனம்; அகில் ஹொசைனின் சூழலில் வீழ்ந்த மும்பை; 103 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி..!
Chennai defeats Mumbai by 103 runs to secure victory
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19-வது சீனாவில் 33 வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில்,05 முறை கோப்பை வென்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் நிதானமாகவே தொடங்கினர்.
இதில் 03 பவுண்டரிகள் 01 சிக்சர் என அட்டகாசமாக தொடங்கிய கேப்டன் ருதுராஜ் 22 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த சர்பராஸ் கான் அடுத்தடுத்து 03 பவுண்டரிகள் அடித்தார். அதன்படி 06 ஓவரில் (பவர் பிளே) 73 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து டெவால்ட் பிரெவிஸ் 21 ரன்கள், கார்த்திக் ஷர்மா 18 ரன்கள், ஜேமி ஓவர்டன் 15 ரன்களில் அவுட்டாக ஒற்றை ஆளாக நின்று மிரட்டலாக விளையாடினார் சஞ்சு சாம்சன். 54 பந்துகளில் 101 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 207 ரன்களை குவித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில், அல்லா கசன்ஃபர், அஷ்வனி குமார் ஆகியோர் தலா 02 விக்கெட்டுகளையும், மிட்செல் சாட்னர், பும்ரா ஆகியோர் தலா 01 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

208 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, தொடக்கம் முதலே சொதப்பிய நிலையில் சகல விக்கெட்டுகளையும் ரன்களும், சூர்யா குமார் 35 ரன்களும் எடுத்தனர். மற்றைய வீரர்கள் பெரிதாக சோபிக்கிப்பவில்லை. இறுதியில் மும்பை அணி, 19 வது ஓவரில் 104 ரன்களை மாத்திரம் எடுத்து, சகல விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
சென்னை அணி சார்பில், அகில் ஹொசைன் 04 ஓவர் பந்து வீசி, ஒரு மெய்டன் ஓவருடன், 17 ரன்கள் விட்டுக்கொடுத்தார். நூர் 02 விக்கெட்டினையும், முகேஷ் சவுத்ரி, அன்சுல் கம்போஜ், ஜேமி ஓவர்டன், குறிப்பினீத் சிங் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர். இன்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் 54 பந்துகளில் 101 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடி, சென்னை அணிக்காக இரண்டாவது சதத்தை அடித்துள்ளார்.
English Summary
Chennai defeats Mumbai by 103 runs to secure victory