தல வாக்கு...முதல் வாக்கு...! - அதிகாலையிலேயே ஜனநாயகக் கடமையை முடித்த நடிகர் அஜித்குமார்...! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் மேடையில் இன்று (வியாழக்கிழமை) ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள இந்த ஜனநாயகப் பெருவிழாவிற்காக, மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் திறம்பட அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில், வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குவதற்கு முன்பே, சென்னை திருவான்மியூரில் உள்ள பாரதிதாசன் பள்ளி வளாக வாக்குச்சாவடிக்கு சென்ற நடிகர் அஜித்குமார் தனது வாக்குரிமையை பதிவு செய்து முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

இதன் மூலம், தமிழகத்தில் முதன்முதலாக வாக்களித்த நபராக அவர் கவனம் பெற்றார் என தெரிவிக்கப்படுகிறது.மேலும்,பாதுகாப்பு ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு, அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளை நிற கோட்-சூட் அணிந்திருந்த அஜித்குமார், வாக்களித்த பின் கை விரலில் பதிக்கப்பட்ட மை அடையாளத்தை வெளிப்படுத்தினார். அவரை காண ரசிகர்கள் திரளாக கூடிய நிலையில், கூட்டத்தை ஒழுங்குபடுத்த காவலர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Ajith Kumar completed his democratic duty early morning


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->