'இந்தத் தேர்தல் ரொம்ப ஸ்பெஷல்...செம எக்சைட்டிங்கா இருக்கப்போது'...! - மையை காட்டி சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!
This election very special very exciting Sivakarthikeyan resilience ink
தமிழக சட்டமன்றத் தேர்தல் உற்சாகமாக நடைபெற்று வரும் நிலையில், அரசியல் தலைவர்களுடன் திரைப் பிரபலங்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள பள்ளி வளாக வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வந்து வாக்குரிமையை பதிவு செய்து ஜனநாயகப் பொறுப்பை நிறைவேற்றினார்.
மேலும், வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த தேர்தல் மிகவும் பரபரப்பும் எதிர்பார்ப்பும் நிரம்பியதாக உள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களின் தாக்கம் இந்த முறை தெளிவாக வெளிப்படுகிறது.
மக்கள் மனநிலை எப்படி பிரதிபலிக்கும் என்ற ஆவல் அதிகமாக உள்ளது” என்று உற்சாகமாக தெரிவித்ததார்.
English Summary
This election very special very exciting Sivakarthikeyan resilience ink