கேரளாவில் 40 டிகிரி செல்சியஸை தாண்டி சுட்டெரிக்கும் சூரியன்; 12 மாவட்டங்களுக்கு வெயில் எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


கேரளாவில் வழக்கத்தை விட இந்த வருடம் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்ற நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் பாலக்காடு, கண்ணூர், கோழிக்கோடு உள்பட பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்பட சில மாவட்டங்களில் கோடை மழை பெய்கின்ற போதிலும் வெப்பநிலை குறையவில்லை.

இந்த சூழலில், கடந்த 02 மாதங்களாக கேரளாவில் வெப்பநிலை சராசரியை விட 02 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இடுக்கி, வயநாடு தவிர மற்ற 12 மாவட்டங்களுக்கும் வானிலை ஆய்வு மையம் வெயில் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை தாண்டி சுட்டெரித்து வருகிறது.  இந்த வாரத்தில் இதே நிலை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, கொல்லத்தில் 39 டிகிரி செல்ஷியசும், கோட்டயத்தில் 38 டிகிரி செல்ஷியசும், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், திருவனந்தபுரம் உள்பட 8 மாவட்டங்களில் 37 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், திருவனந்தபுரத்தில் 36 டிகிரி செல்ஷியஸ் வரையும் வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heatwave Warning for 12 Districts in Kerala


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->