சல்மான் கான் - நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் பூஜை வீடியோ வெளியீடு; படப்பிடிப்பு பணிகள் தொடக்கம்..! - Seithipunal
Seithipunal


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான படம் 'சிக்கந்தர்'. ஆனால் படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று தோல்வியடைந்தது. 

இதனையடுத்து 2022-ஆம் ஆண்டு சீரஞ்சீவி நடிப்பில் வெளியான 'காட்பாதர்' படத்தில் சல்மான் கான், நயன்தாரா நடித்து இருந்தனர். இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைகிறது. இந்த படத்தை விஜயின் வாரிசு படத்தை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். 

இந்நிலையில், மும்பையில் படத்தின் பூஜைகள் நடைபெற்ற நிலையில் அந்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.  வாரிசு படத்தை தயாரித்த தில்ராஜு, இந்த படத்தையும் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக மும்பையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு முதற்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pooja Ceremony Video Released for New Film Starring Salman Khan and Nayanthara


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->