05 மாநிலத் தேர்தல்கள் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை 28 ரூபாயாக உயர்வா..? மத்திய அரசு விளக்கம்..! - Seithipunal
Seithipunal


மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகள் பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக உயர்ந்துள்ளன.

இதன் தாக்கம் ஆசிய நாடுகளை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில், நாட்டின் 05 மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை 25 ரூபாய் முதல் 28 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் Kotak Institutional Equities அறிக்கை வெளியிட்டிருந்தது.

ஆனால், இதனை மத்திய அரசு பெட்ரோலிய அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதாவது, கடந்த 04 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாத ஒரே நாடு இந்தியாதான் என விளக்கமும் கொடுத்துள்ளது.

குறிப்பாக இந்த ஏப்ரல் மாதத்தில் நடக்கும் 05 மாநிலத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை 25 ரூபாய் முதல் 28 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என்ற தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. இத்தகைய விலை உயர்வுக்கான எந்தவொரு முன்மொழிவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளது.

இத்தகைய தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தீய உள்நோக்கம் கொண்டவை என பெட்ரோலிய அமைச்சகம் எச்சரித்துள்ளது. சர்வதேச சந்தைகளில் ஏற்படும் கடுமையான விலை உயர்வில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு அயராது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விளக்கமளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central Government Clarifies Reports of a rs28 Hike in Petrol and Diesel Prices Following the Conclusion of Five State Elections


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->