தவெக பற்றி ஸ்டாலின் எடுத்த சர்வே!ஸ்டாலின் கைக்குப்போன ரிப்போர்ட்..சரியான ரூட்டில் விஜய்! அதிர்ச்சியில் திமுக!
Stalin survey on Tvk Stalin report is in his handsVijay is on the right track DMK in shock
ஆளும் திமுக ஒரு தனியார் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து நடத்தியதாக கூறப்படும் அதிகாரபூர்வமற்ற கருத்துக் கணிப்பில், தமிழக வெற்றி கழகம் (தவெக) குறித்து முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அந்த சர்வேயின் முக்கிய அம்சமாக, தவெக வாக்காளர் ஆதரவில் நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையே கணிசமான இடைவெளி இருப்பது வெளிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சர்வே முடிவுகளின்படி, மாநகரங்கள் மற்றும் நகர்ப்புற மையங்களில் தவெகக்கு 10 முதல் 15 சதவீதம் வரை வாக்காளர் ஆதரவு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக நகர்ப்புற இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் அந்தக் கட்சியின் செயல்பாடுகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இதே அளவிலான ஆதரவு கிராமப்புறங்களில் இல்லை என்றும், அங்கு தவெக வாக்கு ஆதரவு 10 சதவீதத்துக்கும் குறைவாகவே இருப்பதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
தமிழ்நாட்டின் பெரும்பான்மை வாக்காளர்கள் இன்னும் கிராமப்புறங்களில் வசிப்பதால், இந்த குறைந்த கிராமப்புற ஆதரவு தவெகக்கு ஒரு முக்கிய சவாலாக மாறக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். சட்டமன்றத் தேர்தல்களில் முடிவை தீர்மானிப்பதில் கிராமப்புற மற்றும் புறநகர் வாக்காளர்களின் பங்கு முக்கியமானதாக இருப்பதால், இந்த இடைவெளியை தவெக எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதே நேரத்தில், திமுகவின் think tank என அழைக்கப்படும் உட்கட்சி சர்வே குழு நடத்திய மற்றொரு ஆய்வின் அடிப்படையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த ஆய்வு திமுகவுக்கு சாதகமானதும், அதே நேரத்தில் கவலைக்குரியதுமான கலவையான முடிவுகளை வழங்கியதாக கூறப்படுகிறது.
அந்த உட்கட்சி ஆய்வின்படி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளதாம். இது கட்சி தலைமையை உற்சாகப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. ஆனால் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது திமுகவின் மொத்த வாக்கு சதவீதம் குறையக்கூடும் என்றும் அதே ஆய்வு எச்சரிக்கிறது.
இந்த வாக்குச் சரிவுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் வருகை குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் தேர்தலில் தவெக சுமார் 20 சதவீத வாக்குகளைப் பெறக்கூடும் என்றும் அந்த ஆய்வு கணித்துள்ளதாக கூறப்படுகிறது. இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் மற்றும் விஜய்யின் ரசிகர் பட்டாளம் இந்த மாற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மேலும், தவெக எழுச்சி திமுக மட்டுமின்றி அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக உள்ளிட்ட அனைத்து முக்கிய கட்சிகளின் பாரம்பரிய வாக்கு வங்கிகளிலும் ஒரு அளவுக்கு ஓட்டையை உருவாக்கக்கூடும் என்றும் அந்த ரிப்போர்ட் சுட்டிக்காட்டுவதாக கூறப்படுகிறது. தவெக தனித்து ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும், அனைத்து கட்சிகளின் வாக்கு அடிப்படையையும் பாதிக்கும் சக்தியாக மாறக்கூடும் என்பதே இந்த ஆய்வின் மையக் கருத்தாக பார்க்கப்படுகிறது.
English Summary
Stalin survey on Tvk Stalin report is in his handsVijay is on the right track DMK in shock