இவரா....? தனது காதலரை அறிமுகப்படுத்திய நடிகை 'நிவேதா பெத்துராஜ்'..!
Actress Nivetha Pethuraj introduced her lover
தமிழ் திரைஉலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ''நிவேதா பெத்துராஜ்''. இவர் ஒருநாள் கூத்து, பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இவர் கார் பந்தய வீராங்கனையுமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே, நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் 'நிவேதா பெத்துராஜ்' தனது காதலரை அறிமுகப்படுத்தினார்.
அவருடைய காதலரின் பெயர் 'ரஜித் இப்ரான்'. இவர் மாடலிங் துறையைச் சேர்ந்தவர். மேலும், இவர் தொழில் அதிபருமாகவும் இருக்கிறார்.இவர்கள் இருவரும் தங்களது திருமணம் குறித்த அறிவிப்பை விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து,நிவேதா பெத்துராஜ் மற்றும் ரஜித் இப்ரான் ஜோடிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் தற்போது வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகிறார்கள்.
English Summary
Actress Nivetha Pethuraj introduced her lover