இருசக்கர வாகனத்தில் வந்த புது மாப்பிள்ளை... எதிர்பாராத விதமாக லாரியில் சிக்கி விபரீதம்...! - Seithipunal
Seithipunal


நாமக்கலில் ராசிபுரம் அருகே இருக்கும் ஈஸ்வரமூர்த்தி பாளையம் சுத்துவட்டாரத்தை சேர்ந்த குழந்தைபையன் என்பவரின் மகன் 27 வயதான ராஜ்குமார் . இவர் பொக்லைன் ஆபரேட்டராக பணிசெய்து வந்தார்.

 

அதுமட்டுமின்றி, இரும்பு கடையும் இன்னொரு தொழிலாக நடத்தி வந்தார். இவருக்கு நாளை அதாவது வெள்ளிக்கிழமை திருமணம் நடக்க நிச்சயிக்க பட்டிருந்தது.இதனிடையே அவர் நேற்று முன்தினம் திருமணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக சேலம் வந்துள்ளார்.

அதன் பிறகு அங்கிருந்து அன்று இரவு தனது வீட்டிற்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.இதனையடுத்து காரிப்பட்டி அருகே இருக்கும் ராம்நகர் மேம்பாலத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் ராஜ்குமார் தூக்கி வீசப்பட்டார்.இதில் அவருக்கு தலை உள்பட உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே அவர் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக பலியாகினர்.

  இதனைக் கண்ட   அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுது துடித்தனர்.மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

newlywed arriving two wheeler unexpectedly gets caught lorry


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->