“நான் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு?”மகராசி நீங்களுமா..? அதிரடியாகக் களமிறங்கும் நடிகை அம்பிகா..!
What wrong if I enter politics Maharashi Ningaluma Actress Ambika makes a bold move
சென்னை கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் இல்லத்திற்கு சென்று குடும்பத்தாரை ஆறுதல் கூறினார் நடிகை அம்பிகா. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக பிரச்சினைகள் மற்றும் அரசியல் குறித்த தனது எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்தினார்.
“அதிகாரத்தில் இருப்பவர்கள் மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொள்ள வேண்டும். மக்கள் வெறும் டிக்கெட் கிடையாது, கவுண்டரில் போய் எடுக்கும் காசோ கிடையாது. உங்களுக்கு அடிபட்டால் எப்படி வலிக்குமோ, அதே மாதிரி அவர்களுக்கும் வலிக்கும். அவர்களும் மனிதர்கள்தான். வெறும் எண்களாக அவர்களை பார்க்காதீர்கள்” என்று கூறினார்.
மேலும், “நான் அரசியலுக்கு வரவேண்டும் என இருந்தால் அது நடக்கட்டுமே. அதில் எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது. நான் அரசியலுக்கு வந்தால் என்ன? வந்தால் ஒன்றும் தவறில்லை” என்றும் அம்பிகா வலியுறுத்தினார்.
அம்பிகா கடந்த காலங்களில் அரசியலில் ஈடுபட விருப்பம் இருப்பதைப் பலமுறை வெளிப்படுத்தியவர்.2014-ல், அவரது தாயார் கல்லாரா சரசம்மா கேரள மாநில மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்தார்.அப்போது, நடிகை ஜெயலலிதாவின் வேண்டுகோளுக்கிணங்க, அம்பிகாவும் அவரது சகோதரி ராதாவும் ஆண்டிபட்டி தொகுதியில் பிரச்சாரம் செய்தனர்.
2019 முதல், “நிச்சயம் அரசியலுக்கு வருவேன்” என்று கூறி வருகிறார்.2022-ல், பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையாகக் கருத்து தெரிவித்தார்; குற்றவாளிகள் மீது வயது வரம்பின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
2024-ல், மகளிர் உரிமைகள் தொடர்பான விவாதத்தில், நடிகை குஷ்புவின் கருத்துக்கு எதிராக கடுமையாக பதிலளித்தார்.அதே ஆண்டில், தேர்தலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் வலியுறுத்தினார்.
அம்பிகா அரசியல் நிகழ்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். பல்வேறு பிரச்சினைகளில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினாலும், இதுவரை எந்தக் கட்சியிலும் இணைந்தோ அல்லது பதவி வகித்தோ இல்லை. “சரியான நேரத்தில் எந்தக் கட்சியில் சேருவது என்பதை முடிவு செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
What wrong if I enter politics Maharashi Ningaluma Actress Ambika makes a bold move