பெற்ற குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் வீசி கொன்ற கொடூர தந்தை - விருதுநகரில் சோகம்.!!
man arrested for kill child in viruthunagar
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு அருகே கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர்கள் பாண்டி செல்வம்-வனிதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டரை வயதில் பார்கவி என்ற பெண் குழந்தை இருந்தது.இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தம்பதியினருக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால் வனிதா, கணவரை பிரிந்து தன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், பாண்டி செல்வம் வேலைக்கு வரும்போது குழந்தையை பார்த்துச்சென்றார். அந்த வகையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் வேலைக்கு செல்லும் போது குழந்தையை பார்க்க வந்த பாண்டிச் செல்வம் குழந்தையை தான் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு அழைத்து சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே செல்போனில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த குழந்தை பார்கவி அழுதது.

குடும்ப தகராறில் ஆத்திரத்தில் இருந்த பாண்டி செல்வம், அழுத குழந்தையை அடித்து அருகே இருந்த தண்ணீர் தொட்டிக்குள் வீசிவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டிச் செல்வம், குழந்தையின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஆலையில் உள்ள ஒரு எந்திரத்தின் அடியில் மறைத்து வைத்து விட்டு, திருமங்கலம் காவல் நிலையத்துக்கு சென்று குழந்தையை காணவில்லை என்று புகார் அளித்தார்.
இதற்கிடையே அந்த ஆலையில் பணியாற்றும் ஒருவர் நேற்று எந்திரத்தை இயக்க முயன்றபோது துர்நாற்றம் வீசியது. உடனே சம்பவம் குறித்து குறித்து திருமங்கலம் நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்தபோது எந்திரத்தின் ஒரு பகுதியில் ரசாயன மூட்டைக்குள் குழந்தையில் உடல் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசார் பாண்டி செல்வத்திடம் விசாரணை நடத்திய போது அவர் குடும்ப தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தில் தனது குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் பாண்டி செல்வத்தை கைது செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for kill child in viruthunagar