அனிருத்துக்கு திருமணமா...? உண்மையை உரக்கச் சொன்ன சிவகார்த்திகேயன்...!
Anirudh getting married Sivakarthikeyan spoke truth out loud
ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கடந்த 12 ஆண்டுகளில் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் 'அனிருத்'. இவர் இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் உருவான பாடல்களையும் பாடி வெற்றிபெறச்செய்துள்ளார்.

தற்போது அவர் ஜெயிலர் 2 , மதராஸி, ஜனநாயகன் என பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.இவர் மீது அடிக்கடி விமர்சனங்கள் எழுவது வழக்கம். அதிலும் குறிப்பாக திருமணம் குறித்து அவ்வப்போது கிசுகிசுக்கப்படுவார்.
அண்மையில் கூட முக்கிய பிரபலத்துடன் இணைத்து அனிருத் கிசுகிசுக்கப்பட்டார்.இதனிடையே, நிகழ்ச்சி ஒன்றில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனிடம், ‘உங்கள் நண்பர் அனிருத்துக்கு எப்போதுதான் திருமணம் ஆகும்?' என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “பொதுவாக இரவு 8 மணிக்கு மேல் திருமணம் ஆனவர்களுக்கு எங்கே இருக்கீங்க? என வீட்டிலிருந்து அழைப்பு வரும். ஆனால் அனிருத் தூங்கி எழுவதே இரவு 8 மணிக்கு தான்.
திருமணமா? ஹிட் பாடல்களா? என்று வரும்போது அவருக்கு ஹிட் பாடல்கள் தான் முக்கியம். மற்றபடி முடிவு அவர் கையில்” என்று தெரிவித்தார்.
English Summary
Anirudh getting married Sivakarthikeyan spoke truth out loud