மீண்டும் வெடித்த வடகலை-தென்கலை பிரச்சினை...! - காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்
North Southern Art dispute has erupted again Kanchipuram Varadaraja Perumal Temple
காஞ்சிபுரம் மாவட்டம் 'வரதராஜ பெருமாள்' கோவிலில், வைகாசி பிரம்மோற்சவத்தின் 2-ம் நாள் விழாவில் ஹம்ஸ வாகனத்தில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் அருள்பாலித்தார்.

அப்போது மண்டகபடி கண்டருளியபோது வடகலை - தென்கலை பிரிவினருக்கும் இடையே மந்திர புஷ்பம் பாடுவதில் வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டது.
இந்த இருபிரிவினருக்கும் இடையே மோதல் வாக்குவாதத்தால், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதியில் காத்துக்கொண்டிருந்தனர்.
மேலும், கடந்த வருடமும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின் மண்டகப்படியின்போது பிரபந்தம் பாடுவதில் வடகலை- தென்கலை பிரிவினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் அதேபோல் பிரச்சனையை எழுந்துள்ளது. இதற்கு தீர்வு காணுவார்களா? என்பது இனிதான் தெரியும்.
English Summary
North Southern Art dispute has erupted again Kanchipuram Varadaraja Perumal Temple