நில அபகரிப்பு வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சருக்கு நேரில் ஆஜராக சம்மன்! - Seithipunal
Seithipunal


ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்ற வழக்கில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர்.கரூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் அதே  கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்றதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த புகாரில்  அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த ஆண்டு எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்தனர்.அதனை தொடர்ந்து  எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்தநிலையில் பினாமி பெயரில் இந்த சொத்தை அவர் வாங்க முயன்றாரா? வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இதுதொடர்பாக நில உரிமையாளருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து  ஒருவர் வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து உள்ளார். 

இதனைத்தொடர்ந்து தற்போது பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ், வருகிற 23-ந்தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கர் அல்லது அவருடைய வக்கீல் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக மீண்டும் வருமானவரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Land encroachment case Summons issued for former minister of AIADMK to appear in person


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->