உயிருக்குள் உயிர் கொடுத்து உதிரத்தை உணவாக்கி...'அன்னையர் தினம்' வாழ்த்துகள்..! - எடப்பாடி பழனிசாமி
Happy Mothers Day Edappadi Palaniswami
சர்வதேச அன்னையர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் 'எடப்பாடி பழனிசாமி' தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி:
இந்தப் பதிவில் அவர் தெரிவித்ததாவது,"அன்பின் முழு வடிவமாகவும், தியாகத்தின் முழு உருவமாகவும், பிரபஞ்சத்தின் வாழ்வை அழகாய்; அர்த்தமாய் மாற்றிடும் உயிரும் மெய்யுமான ஒப்பற்ற அன்னையின் மகத்துவத்தை போற்றுவதோடு.
உயிருக்குள் உயிர் கொடுத்து உதிரத்தை உணவாக்கி உலகத்தை உனதென தந்த உன்னத அன்னையர் அனைவருக்கும் "அன்னையர் தினம்" வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.இது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
English Summary
Happy Mothers Day Edappadi Palaniswami