முதலில் சமூக நீதி.. பின்பு சாதி அரசியல்.. இதுதான் திமுக.!! ரவுண்டு கட்டி அதிமுக தரப்பு.!!
AIADMK criticizes DMK RSBharathi talking about caste politics
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு மற்றும் 10 உறுப்பினர்கள் பதவிகளுக்கான பெயர்களை பரிந்துரை செய்து ஆளுநர் ஆர்.என் ரவிக்கு தமிழக அரசு ஆவணங்களை அனுப்பியிருந்தது. இந்த நியமன ஆவணங்கள் அனுப்பி ஒரு மாதத்திற்கு மேலான நிலையில் ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தார்.

ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதில் அளித்த பிறகும் ஒப்புதல் அளிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு நியமனம் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி "திமுக ஆட்சியில் அரசியலுக்கு அப்பாற்பட்டவரான சைலேந்திர பாபுவை பரிந்துரை செய்துள்ளோம். ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்திற்கு போட்டியாக இன்னொரு அரசை நடத்தி வருகிறார்.

நாடார் சமூகத்தை சேர்ந்தவர் இதுவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக வரவில்லை. எனவே சமூகநீதி நோக்கத்தோடு சைலேந்திர பாபுவை முதல்வர் நியமித்துள்ளார். ஆனால் அதை ஆளுநர் ஏற்க மறுக்கிறார்" என சாதி ரீதியில் குற்றம் சாட்டி இருந்தார்.
திமுக அமைப்புச் செயலாளரின் இத்தகைய குற்றச்சாட்டுக்கு அதிமுக தரப்பு கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளது. அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி கோவை மண்டல செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் "முதலில் சமூக நீதி என்பார்கள், பின்பு சாதியை வைத்து அரசியல் செய்வார்கள், பின்னர் பிச்சை போட்டோம் என சொல்லிக் காட்டுவார்கள், இதான் திமுக! தகுதியானவர் எந்த சாதியாக இருந்தாலும் வர வேண்டியது தானே! ஒவ்வொரு மேடையிலும் சாதியை பற்றி பேச தவறுவதில்லை பின்பு பெரியார் வழி என்பார்கள்!" என திமுகவை காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
AIADMK criticizes DMK RSBharathi talking about caste politics