அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் அறிவிப்பு!
ADMK rajya sabha candidate
தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 19 அன்று நடைபெற உள்ளது. ஒரு வேட்பாளர் வெற்றி பெற 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதற்கான கணக்கீட்டின்படி, திமுக 4 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் வெற்றி பெறும் சந்தர்ப்பம் அதிகம் உள்ளது.
திமுக சார்பில் முன்னாள் எம்.பி. வில்சன், கவிஞர் சல்மா மற்றும் சிவலிங்கம் ஆகிய மூவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இடம் கூட்டணிக் கட்சி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவும் தனது மாநிலங்களவை வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அக்கட்சியின் வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தனபால் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக பெயர் பதிவு செய்துள்ளனர்.
English Summary
ADMK rajya sabha candidate