தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கிய அதிமுக! அதிகாரபூர்வ அறிவிப்பு!
ADMK DMDK Alliance Rajya Sabha seat
தேமுதிகவுக்கு 2026-ல் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தாவது, "அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக தொடர்ந்து உள்ளதாகவும், 2026 மாநிலங்களவை தேர்தலில் அந்தக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும் எனவும் உறுதி செய்யப்படுகிறது.

தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அவைத்தலைவர் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள்” என்றார்.
2024 மக்களவைத் தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவும், பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமகவும் இடம் பெற்றன. கூட்டணி பேச்சுவார்த்தைகளின் போது தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் வழங்கப்படும் என பேசப்பட்டது. ஆனால் அதிமுக தெளிவாக அறிவிக்கவில்லை.
English Summary
ADMK DMDK Alliance Rajya Sabha seat