கிராமங்களில் ஹிட்டாகி வரும் நத்தைக் கறி! பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்கும் நத்தை கறி! - Seithipunal
Seithipunal


ஞாயிற்றுக்கிழமை என்றாலே நமக்கு அசைவ உணவு தான் ஞாபகம் வரும். அடிக்கடி அசைவ உணவு சாப்பிடாதவர்கள் கூட ஞாயிற்றுக்கிழமை அசைவ உணவை விரும்பி சாப்பிடுவார்கள் ஆனால் ஆந்திர மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வித்தியாசமான அசைவ உணவை  தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருவது தற்போது வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலத்தின் கோதாவரி நதி கரையில் உள்ள மாவட்டங்களைச் சார்ந்த மக்கள் கொஞ்சம் வித்தியாசமாக நத்தை கறியில் சமைத்த காரசாரமான உணவுகளை கொண்டு வருகிறார்கள். மற்ற இறைச்சிகளுடன் ஒப்பிடும்போது நத்தையில் ஏராளமான நன்மைகளும் ஊட்டச்சத்துகளும் இருப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். நத்தை குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கலோரிகளை உள்ளடக்கி உள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

நத்தைகளில் அவற்றின் இனத்தைப் பொறுத்து  ஊட்டச்சத்துக்கள் மாறுபடும் என தெரிவிக்கும் இவர்கள் நத்தைகளில் அதிகமான அளவு கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இவற்றில் ஒமேகா-3 அதிக அளவில் இருப்பதாக   தெரிவிக்கின்றனர்.

மேலும் நத்தைகளில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளதாகவும் இதனால் வெளிநாடுகளில் இரும்புச் சத்து குறைவாக உள்ளவர்களுக்கு  மாற்று உணவாக நத்தைகள் பரிந்துரைக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

நத்தைகளில் 82% நீர் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் இவை  மனச்சோர்வு நரம்பு மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலங்களை வலுப்படுத்தும். மேலும் தைராய்டு சுரப்பிகளின்  செயல்பாட்டையும் ஒழுக படுத்துகின்றன. மூல நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுவதோடு உடலின் குளிர்ச்சி தன்மையும் அதிகரிக்கிறது.

பொதுவாக கடல் நத்தைகளை விட ஏரிகள் மற்றும் வயல்வெளிகளில் இருக்கும் நத்தைகள் அதிக சத்துள்ளதாக கருதப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் சில கிராமங்களில் மழை காலங்களில் தொடர்ச்சியாக நத்தைகளை சாப்பிட்டு வருவதாகவும் தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Snail curry which is gaining popularity in Indian villages is said to be the best medicine for many diseases


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->