மஞ்சளை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் - தெரிந்துகொள்வோமா?
manjal benefits
மஞ்சளை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் - தெரிந்துகொள்வோமா?
சமையலில் வாசனைக்கும் நிறத்துக்கும் சேர்க்கப்படும் மஞ்சளில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருந்தாலும் இந்த மஞ்சளை பொதுவாக உணவில் 3 கிராம் அளவுக்குள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், மஞ்சளை யாரெல்லாம் சேர்த்துக்கொள்ளலாம், யாரெல்லாம் சேர்த்துக்கொள்ள கூடாது என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
* பித்தப்பை பிரச்சினை உள்ளவர்கள் அதிகளவு மஞ்சள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
* மஞ்சளில் உள்ள குர்குமின் ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்கும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
* இரைப்பை, உணவுக்குழாய், ரிஃப்ளக்ஸ் கோளாறு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
* கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் மஞ்சளை உட்கொள்ளும்போது பாதிப்பை ஏற்படுத்தலாம்.
* மேலும், உணவைத்த தவிர்த்து பிற ஆரோக்கிய, முக அழகு செயல்பாடுகளுக்கு மஞ்சளை தாராளமாக பயன்படுத்தலாம்.