பழைய கஞ்சிக்கு இஞ்சி புளி துவையல் - எப்படி செய்வது?
how to make ginger thuvaiyal
பழைய கஞ்சிக்கு இஞ்சி புளி துவையல் - எப்படி செய்வது?
செரிமான பிரச்சினையைத் தீர்க்க ஒரு அற்புத மருந்தாக இஞ்சி உள்ளது. இதனை விழுதாக அரைத்து குழம்புகளில் சேர்ப்பார்கள். அதேபோல், டீயிலும் இஞ்சி சேர்த்து குடிப்பார்கள். இந்த இஞ்சியை துவையலாக அரைத்து சாப்பிடுவார்கள். இந்த துவையலை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.
தேவையான பொருள்:-
இஞ்சி
புளி
பச்சை மிளகாய்
வெல்லம்
எள்
கடுகு
எண்ணெய்
உப்பு

செய்முறை:-
முதலில் புளியை கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இஞ்சியைத் தோல் சீவி பொடிப்படியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதன் பின்னர் எள்ளை ஒரு கடாயில் வறுத்து அதனை பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அதில் இஞ்சி, பச்சை மிளகாயை நன்கு வதக்கி அதனுடன், கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதில், வெல்லம் சேர்த்துக்கொள்ளவும்.
இந்தக் கரைசல் நன்கு கொதித்த உடன் அரைத்து வைத்துள்ள எள்ளு பொடியைத் தூவி இறக்க வேண்டும். இந்த இஞ்சி துவையலை கஞ்சி சாதம் உள்ளிட்ட சாப்பாட்டுடன் சுவைத்து சாப்பிடலாம்.
English Summary
how to make ginger thuvaiyal