பாகற்காய் சாப்பிடறப்போ 'இந்த தப்பு' மட்டும் பண்ணிடாதீங்க"!. உஷார் தகவல்.! - Seithipunal
Seithipunal


என்னதான் சில பொருட்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்களாக இருந்தாலும் அவற்றை  இன்னொரு பொருளுடன் இணைந்து சாப்பிடும் போது அவை ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அத்தகைய இரண்டு உணவுப் பொருட்களையும் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக மரவள்ளி கிழங்கு மற்றும் இஞ்சியை குறிப்பிடலாம். மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டுவிட்டு இஞ்சி தண்ணீர் குடித்தால் உயிர் கூட சில நேரங்களில் போய்விடும் அந்த அளவுக்கு விஷமான ஒன்று. பாகற்காய் என்பது நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் பல ஊட்டச்சத்துக்களையும் கொடுப்பதாக இருந்தாலும் அதனை சில பொருட்களுடன் இணைந்து சாப்பிடுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அவை என்ன என்று பார்ப்போம்.

பாகற்காய் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பதால் வயிற்று பிரச்சனைகள் ஏற்படும். இவை மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தக் கூடியதாகும். இதனால் பாகற்காய் சாப்பிட்ட பின் பால் குடிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பாகற்காய் சாப்பிடும்போது முள்ளங்கியால் தயாரிக்கப்பட்ட எந்த ஒரு பொருளையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தொண்டை பகுதியில் அமிலத்தன்மை மற்றும் சளி ஏற்பட காரணமாக அமைகிறது.

வெண்டைக்காயும் ஆரோக்கியமான ஒரு காய்கறி தான் என்றாலும் அதனை பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடும் போது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனால் வயிற்று கோளாறு அஜீரணம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன எனவே பாகற்காய் சாப்பிடும் போது வெண்டைக்காயை தவிர்த்துக் கொள்ளவும்.

பாகற்காயுடன் மாம்பழத்தை சேர்த்து சாப்பிடும் போது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கக் கூடியதாகும். பாகற்காயுடன் மாம்பழத்தை சாப்பிடும் போது நெஞ்செரிச்சல் குமட்டல் போன்ற அஜீரணக் கோளாறு சார்ந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Avoid these foods if you eat bitter gourd


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->