பிரிட்ஜில் தப்பி தவறியும் இந்த பொருட்களை வைத்துவிடாதீர்கள்.! - Seithipunal
Seithipunal


நாம் சமைக்க பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சமையல் செய்து மீதமுள்ள பொருட்களை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாத்து வருகிறோம். ஆனால், சில பொருட்களை குளிர்பதன பெட்டியில் வைக்க கூடாது. இவ்வாறாக குளிர்பதன பெட்டியில் என்னென்ன பொருட்களை வைக்க கூடாது என இன்று காண்போம்.

வெங்காயம்: 

பொதுவாக வெங்காயம் காற்றோட்டமான சூழ்நிலையில் இருந்தால் நல்லது. கடைகளில் இருந்து பாலித்தீன் பைகளில் வெங்காயத்தை வாங்கி வந்தாலும், காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும். குளிர்பதன பெட்டியில் வைக்க கூடாது.

பூண்டு: 

எந்த சமயத்திலும் பூண்டை குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது. குளிர்பதன பெட்டியில் பூண்டை வைத்தால் பூஞ்சை பிடிக்க துவங்கும். காற்றோட்டமான சூழலில் பூண்டுகளை வைக்க வேண்டும்.

உருளை கிழங்கு: 

உருளைக்கிழங்கை குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது. இயல்பாக வைக்கும் போதும் கழுவி சுத்தம் செய்து வைக்க கூடாது. உருளைக்கிழங்கில் பச்சை நிற வேர்கள் அல்லது பச்சை நிறத்தை கொண்ட உருளைக்கிழங்கு வாங்குவதை தவிர்க்க வேண்டும். 

தேன்: 

உலகத்தில் கெட்டுப்போகாத பொருளாக தேன் இருக்கிறது. நாம் இன்றளவில் கடைகளில் வாங்கும் தேன் பல கலப்பட பொருட்கள் கலந்து வருகிறது. தேனை குளிர்பதன பெட்டியில் வைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல. 

வாழைப்பழம் மற்றும் பூசணிக்காய்: 

வாழைப்பழத்தை குளிர்பதன பெட்டியில் வைத்தால் விரைவில் தோல் கருத்து கெட்டுபோய்விடும். இதனைப்போன்று பூசணிக்காயை காற்றோட்டமான இடத்தில் வைப்பது சிறந்தது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Could Not Place Fridge this Vegetable and Kitchen Items


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->