தனுராசனம் செய்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?..! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள பலரும் தங்களின் உடல்நலம் மற்றும் மனநல ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பொருட்டு ஆசனங்கள், யோகாக்கள் செய்து வருகின்றனர். அந்த வகையில், தனுராசனம் செய்வது எப்படி? அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இன்று காணலாம். 

தனூர் என்றால் வில் என்று பொருளாகும். வில்லை போல உடலை வலைப்பதால், இதற்கு தனுராசனம் என்று பெயர் வந்தது. இந்த ஆசனத்தில் முதுகெலும்பை வில்லாக வளைத்து, கால் மற்றும் கைகள் கயிறுகளை போல செயல்பட்டு கட்டிக்கொள்கிறது.

தரையில் குப்புற படுத்து, கைகளால் கால்களை இருக்க பிடித்த பின்னர், சுவாசத்தினை வெளியிட்டு தலையை மேலே வளைத்து கால்களையும் மேல்நோக்கி இழுத்து கொண்டு வர வேண்டும். இதனை செய்வதால் முதுகெலும்பின் வழியாக இயங்கும் அனைத்து நாடி நரம்புகளுக்கும் புதிய இரத்தம் செலுத்தப்படுகிறது. 

இரைப்பை மற்றும் குடலில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்படுகிறது. ஜீரண சக்தி அதிகரிக்கிறது. சோம்பல் குறைந்து, கபம் வெளியேறுகிறது. தொந்தி கரைதல், மார்பகம் விரித்தல், இமைத்துடிப்பு அதிகரித்தல் போன்றவற்றுக்கு உதவி செய்கிறது. 

இதுமட்டுமல்லாது அஜீரணம், வயிற்று வலி, வாய் துர்நாற்றம், வயிற்று கொழுப்பு, ஊளைச்சதை போன்றவை நீங்கி உடல் பழம்பெரும். ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளுக்கு நல்ல இரத்த ஓட்டம் ஏற்பட்டு, பெண்களுக்கு கர்ப்பப்பை பலமடையும். மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of Dhanurasana Health tips Tamil


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->