குட் நியூஸ்! மலையாளத்தில் அறிமுகமாகும் ஊர்வசி மகள் தேஜலக்ஷ்மி...! - Seithipunal
Seithipunal


தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் 'ஊர்வசி'. இவர் இதுவரை 700 -க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவரது நடிப்பில் வெளியான ஜே பேபி, உல்ழொலுக்கு, ஹெர் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.

மேலும், ஊர்வசி மற்றும் மனோஜ் கே.ஜெயன் தம்பதிக்கு பிறந்தவர் 'தேஜலக்ஷ்மி'. ஆனால் மனோஜுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணத்தினால், கடந்த 2008 -ம் ஆண்டு இவர்கள் பிரிந்தனர். இவர்களுக்கு பிறந்த மகளான தேஜ லக்ஷ்மி தந்தையான மனோஜ் அரவணைப்பில் வளர்ந்து வந்தார்.

இவர் தற்பொழுது தேஜலட்சுமி மலையாள திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்திற்கு `சுந்தரியாயவல் ஸ்டெல்லா' என்ற தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தை ஐகே கே தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, அறிமுக இயக்குநரான பினு பீட்டர் இயக்குகிறார். மேலும், படத்தின் நாயகனாக சர்ஜனோ காலித் நடிகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படத்தின் ஒளிப்பதிவை அனீஷ் மேற்கொள்ள இசையை ஸ்ரீனாத் சிவசங்கரன் இசையமைக்கிறார். மேலும், படத்தை பற்றிய கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Good news Urvashis daughter Tejalakshmi will be making her Malayalam debut


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->