கமிஷனர்களுக்கு தமிழக அரசின் அவசர உத்தரவு! -நகராட்சி நிர்வாகம் 24 மணி நேர கண்காணிப்பில் இருக்க...? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையுடன் புயல் மழையும் இணைந்து கொட்டித் தீர்க்கும் நிலையில், பல மாவட்டங்களில் கடும் மழை மற்றும் வெள்ளநீர் சிக்கல் உருவாகியுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பையும், நகர்ப்புற வசதிகளையும் உறுதி செய்யும் நோக்கில், தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் அவசர நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

மேலும், மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்களுக்கு, “முழு விழிப்புடன் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட வேண்டும்” என்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மரம் சாய்ந்தது, மின்கம்பி விழுதல் அல்லது மழைநீர் தேங்குதல் போன்ற தகவல்கள் வந்தவுடன், விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது.

இந்த மழையால் அடிக்கடி பாதிக்கப்படும் பகுதிகள் நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் அவசர கட்டுப்பாட்டு அறைகள் செயல்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றுக்கு வரும் ஒவ்வொரு புகாரும் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், மழை காரணமாக வீடிழந்த அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி தங்குமிட வசதி, உணவு வழங்கல், மற்றும் நிவாரண முகாம்கள் அமைக்கப்படும்.

மாநகராட்சி அலுவலகங்களில் 24 மணி நேர “வானிலை கண்காணிப்பு பிரிவு” அமைக்கப்பட்டு, வானிலை மையம் வெளியிடும் எச்சரிக்கைகள் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu government urgent order to commissioners municipal administration under 24 hour surveillance


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->