நெல் முளைக்குது… மனசு உடையுது...! - தஞ்சை வயல்களில் விவசாயிகளின் வேதனையை நேரில் கண்டு வெந்த எடப்பாடி பழனிசாமி...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, டெல்டா மாவட்டங்கள் முழுவதும் கனமழை கொட்டி தீர்க்கிறது. தொடர்ந்து பெய்த மழையால் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பகுதியில் உள்ள குறுவை சாகுபடிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இந்த அறுவடைக்கு தயாராக இருந்த பசுமையான நெற்பயிர்கள் தற்போது மழை நீரில் முழ்கி, கதிரோடு சாய்ந்து கிடக்கின்றன.

சில வயல்களில் நெல் மணிகள் முளைத்து பழுதாகி விட்டன. விவசாயிகள் “ஒரு ஏக்கருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்தோம்; இப்போது எல்லாம் நீரில் கலந்துவிட்டது” எனத் துயரத்துடன் தெரிவித்தார்.இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட தஞ்சையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

காட்டூர் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்குச் சென்று மழையில் நனைந்த, முளைத்த நெல் மணிகளை கையில் எடுத்து பார்வையிட்ட அவர், விவசாயிகளிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார்.

இந்த மழையின் தாக்கத்தால் முழுமையாக சேதமடைந்த நெற்பயிர்களைப் பார்த்த எடப்பாடி பழனிசாமி, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Paddy sprouting My heart is breaking Edappadi Palaniswami who witnessed suffering farmers Thanjavur fields


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->