மழையில் தத்தளிக்கும் மக்களுக்கு அரசு துணை! -1.5 லட்சம் பேருக்கு சுடுசுடு காலை உணவு...!
Government assistance to people struggling rain Hot breakfast for 1point5 lakh people
வடகிழக்குப் பருவமழை துவங்கியதன் பின்னர் தமிழகமெங்கும் மழை மும்முரமாக கொட்டி தீர்க்கிறது. இதனால் சில பகுதிகளில் நீர்நிலை உயர்ந்தும், மக்கள் அவதியடைந்து வருவதையடுத்து, மக்களின் பாதுகாப்பே முதன்மை என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.அவரது உத்தரவின் பேரில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில் சென்னையில் மட்டும் 215 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதில் தங்குமிடம் மட்டுமல்லாது, உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள், கழிப்பிடம், மின்சாரம் என அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.அதேபோல், முகாம்களில் தங்கும் மக்களுக்கு சத்தான உணவு வழங்க 106 உணவு தயாரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில் 68 மையங்களில் தற்போது உணவு சமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.சென்னையில் பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று காலை மட்டும் 1,46,950 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேலும், 24 மணி நேரமும் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (Control Room) வழியாக பொதுமக்களின் புகார்கள் 1913 என்ற உதவி எண்ணில் பெறப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 22,000 மாநகராட்சி ஊழியர்களும், 2,149 நீர்வாரிய பணியாளர்களும் தளத்தில் நேரடியாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழை தாக்கம் எவ்வளவு இருந்தாலும், அரசு முழுமையான தயார்நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Government assistance to people struggling rain Hot breakfast for 1point5 lakh people