மழை அலர்ட்! 23 முதல் 28 வரை தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்க்கும்...! அதிலும் நாளை...?
Rain alert Heavy rains will fall Tamil Nadu from 23 to 28 Especially tomorrow
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முழு வீச்சில் கொட்டி தீர்க்கிறது! அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கிய இந்த பருவமழை தற்போது மாநிலம் முழுவதும் பரவலாக தனது தாக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது.வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அந்த தாழ்வு பகுதி மேலும் புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லையெனினும், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, அடுத்த சில நாட்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை மணி அடித்துள்ளது.
அக்டோபர் 23ஆம் தேதி: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் தீவிரமான கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
அக்டோபர் 24ஆம் தேதி: கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை மீண்டும் பலம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 26 முதல் 28 வரை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொடர்ச்சியான கனமழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும் இதே நாட்களில் கனமழை கொட்டும் வாய்ப்பு அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Rain alert Heavy rains will fall Tamil Nadu from 23 to 28 Especially tomorrow