மாஸ்ஸா! பசில் ஜோசப் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன்...! - Seithipunal
Seithipunal


மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் 'பசில் ஜோசஃப்'. இவர் இதுவரை நடித்துள்ள படங்கள் பெரும்பாலானவை வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளது.மேலும், பசில் ஜோசஃப் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர்.

இவரது நடிப்பில் வெளியான ஜெய ஜெய ஜெய ஹே, ஜான்.ஈ மேன், ஃபலிமி, நுன்னாகுழி மற்றும் சமீபத்தில் வெளியான சூக்ஷ்மதர்ஷினி மற்றும் பொன்மேன் மாபெரும் வெற்றியை பெற்றது.

மேலும்,அண்மையில் இவரது நடிப்பில் வெளியான 'மரணமாஸ்' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.அதுமட்டுமின்றி  இவர் டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் நடிப்பில் மலையாள சூப்பர் ஹீரோ திரைப்படமான மின்னல் முரளி திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பசில் ஜோசஃப் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் திரைப்படத்தை இயக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படமாக இருக்கும் என்று கருதபப்டுகிறது. மேலும், அல்லு அர்ஜுன் தற்போழுது அட்லீ இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Allu Arjun in the direction of Basil Joseph


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->