20 கி.மீ துரத்தி பிடித்து காதலனை கரம் பிடித்த காதலி! உ.பி., சம்பவம் வைரல்!
Uttar Pradesh love marriage some incident
மணமேடையில் இருந்து தப்பித்து ஓடிய மணமகனை, சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்ற மணமகள், மீண்டும் அழைத்து வந்து திருமணம் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், பதான் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சுமார் இரண்டு ஆண்டுகளாக பெண் ஒருவர் காதலித்து வந்துள்ளார்.
இதனை அடுத்து இருவரின் இந்த காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து, திருமண தேதியை முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை அருகில் உள்ள கோவிலில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. ஆனால், திருமண நாள் அன்று திருமண மேடைக்கு மணமகன் வெகு நேரம் ஆகியும் வரவில்லை.
மணக்கோலத்தில் காத்திருந்த பெண், மணமகனுக்கு போன் செய்துள்ளார். அப்போது பல்வேறு காரணங்களை கூறி திருமணத்தை தட்டிக் கழித்ததாக தெரிகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த மணப்பெண், மணமடையில் இருந்து நேரடியாக பேருந்து நிலையம் சென்றார். அங்கிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மணமகனை தேடி கண்டுபிடித்து, மீண்டும் அவரை வலுக்கட்டாயமாக திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தார்.

பின்னர், இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இது குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. திரைப்பட சம்பவத்தை போல அந்த பெண் மணமகனை தேடி கண்டுபிடித்து திருமணம் செய்து உள்ளதாகவும் பலரும் கருது தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Uttar Pradesh love marriage some incident