இன்றுமுதல் மாற்றம்! திருப்பதி போகும் பக்தர்கள் கவனத்திற்கு!
Tirupati temple devotees plan change VIP
கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் திரளாக வருகை தருவதால், தரிசன முறையில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பக்தர்களின் திரளைக் கட்டுப்படுத்தும் வகையில், இன்று முதல் *வி.ஐ.பி. தரிசனத்தில் மாற்றங்கள்* செய்யப்பட்டுள்ளது. வி.ஐ.பி பரிந்துரை கடிதங்கள் ஜூலை 15 வரை, அதாவது 2½ மாதங்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளைத் தவிர, மற்ற நாட்களில் வி.ஐ.பி தரிசன முறைகள் கட்டுப்பாடுகளுடன் அமலுக்கு வருகின்றன.
புதிய நிர்ணயப்படி, நீதிபதிகள் மற்றும் மந்திரிகளுக்கு காலை 5.45 மணிக்கு, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு 6.30 மணிக்கு தரிசன நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரேக் தரிசனம் 6.45 மணிக்கு, ஸ்ரீவாணி தரிசனம் (ரூ.10,000 கட்டணம்) 10.15 மணிக்கு நடைபெறும். நன்கொடையாளர்களுக்கு காலை 10.30 மணி மற்றும் ஓய்வுபெற்ற தேவஸ்தான ஊழியர்களுக்கு 11 மணிக்கு தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு வழக்கமான தரிசனத்தில் மாற்றமில்லை. கூட்ட நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகளை திருப்பதி தேவஸ்தானம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
English Summary
Tirupati temple devotees plan change VIP